_Fotor.jpg)
1847ம் ஆண்டு வட்டுகோட்டையில் பணியாற்றி வந்தார். இங்கு ஒரு வருடம் பணியாற்றிவிட்டு தமது மருத்துவ மனையை மானிப்பாய்க்கு மாற்றிவிட்டு சென்றார். மருத்துக் கல்வியும் மாற்றப்பட்டது. நோயாளிகளின் தொகை பெருகிய காரணத்தினால் அமெரிக்க மிசன் டாக்டர் கிறின் அவர்கள் மானிப்பாய்க்கு மாற்றியிருக்க வேண்டும். வட்டுக்கோட்டை மிசனரியும் அப்போது வளர்ச்சியடைந்தமையினால் அங்கு இட நெருக்கடியும் ஏற்பட்டிருக்கலாம்.
மானிப்பாய் சென்ற டாக்டர் கிறின் அவர்களுக்கு மூன்று பணிகள் காத்திருந்தன. முதலாவது யாழ்பாணத்தில் பணியாற்றிய மிசனரிமாருக்கு சிகிச்சை அளித்தல் தம்மிடம் வருகின்ற மற்றைய நோயாளிகளுக்கு வைத்தியம் செய்தல்.
இரண்டாவதாக டாக்டர் ஸ்கடர் அவர்களினாலே பயிற்றப்பட்டு மிசன் அமைப்புக்குள் பல்வேறு இடங்களில் பணியாற்றி கொண்டிருக்கும் வைத்தியர்களது வேலைகளை மேற்பார்வை செய்தலும் ஆலோசனை வழங்கலும மூன்றாவதாக சுதேச மாணவர்களுக்கு பயிற்சியளித்து அவர்களை வைத்தியர்களாக்குவது இப்படி செய்தினால் அமெரிக்காவிலிருந்து வைத்தியர்களைக் கொண்டுவரத் தேவையில்லையென்றும் அதனாலே அமெரிக்க இலங்கை மிசனரி செலவு குறைவு என்று எதிர்பார்த்தனர்.
இக்காலத்தில் சுதேச மக்களிடையே தவறான நம்பிக்கையை நீக்குவதற்கும் டாக்டர் கீறீன் முயன்றார். மக்களிடையே காணப்படும் நோய்களை இனங்கண்டு அவற்றிற்குரிய காரணங்களையும் கூறினார். அவருடைய ஆய்வில் அதாவது டாக்டர் கீறீன் அவர்கள் பல நோய்களுக்கும் காரணம் மக்களினுடைய அறியாமையும் அவர்களினுடைய உணவு பழக்கமுமே என்று கூறினார். மக்களினுடைய தவறான ஒழுக்கங்கள் பற்றியும் அவர் ஒரு துண்டுபிரசுரம் எழுதி வெளியிட்டார். இப்படியான ஆராய்ச்சிகள் அவருடைய நேரத்தை அதிகம் எடுத்த போதும் அவர் தமிழ் மொழியை கற்றார். மருத்துவக்கல்லூரி உருவாக்கப்பட்டடு மருத்துவம் கற்பிக்கப்பட்டடு அதன் மூலம் பல மருத்துவர்கள் உருவாகினார்கள்.
19ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் இருந்து வந்த மிசனரிமார் இந்து மதத்தை அஞ்ஞான மதம் என கருதி கிறிஸ்தவத்தை போதிக்கும் நோக்குடன் தமது வைத்திய அறிவை பயன்படுத்தினர். டாக்டர் கிறினினால்இதன் மூலம் பசுமை நினைவு வைத்தியசாலையில் மருத்துவர்களாக பணியாற்றி சிறந்த சேவைகளை வழங்கினர்.
டாக்டர் கீறீன் யாழ்பாணத்தில் பணியாற்றிய 20 வருடங்களில் 62 வைத்தியர்களை உருவாக்கினார். இந்த வைத்தியசாலையில் அறுவைசிகிச்சை முறையும் மகப்பேற்று மருத்துவமும் சிறப்பானதாக அன்றுதொடக்கம் காணப்பட்டடு வருகின்றது. இவ் வைத்தியசாலை 1848ல் மானிப்பாயில் நிறுவப்பட்டது. முதல் மருத்துவ பள்ளி மேற்கு மருந்து கற்பிக்க யாழ்பாண தமிழ் மக்களால் பசுமை நினைவு மருத்துவமனை அறியப்பட்டது. இலங்கையில் முதல் மருத்துவம் மருத்துவமனையில் மற்றும் கற்பித்தல் வசதி பசுமை நினைவு மருத்துவ மனையினை நிர்வகிக்கும் தென்; இந்திய திருச்சபை யாழ்பாணம் மறை மாவட்டம் 1998 அக்டோபர் மாதம் 150வது ஆண்டு நிறைவையும் கொண்டாடியது.
ஆங்கிலேயர் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட வைத்தியசாலை ஆரம்ப காலம் முதல் இன்று வரை தென்னிந்திய திருச்சபை மற்றும் மிசனரிகளின் உதவியுடனேயே இயங்கி வருகின்றது
மூடநம்பிக்கைகளில் மூழ்கியிருந்த மக்களை மேலைதேய வைத்திய முறைக்கு மாறச்செய்த பெருமை இந்த பசுமை நினைவு வைத்தியசாலைக்கு உண்டு. ஆரம்ப காலங்களில் இருந்த ஒத்த வகையிலேயே இன்றும் ஒரு சில மாற்றங்களுடனும் சிறப்பு வைத்தியர்களின் பற்றாக்குறை போன்ற பல்வேறு குறை நிறைகளுடன் இயங்கி வரும் green memorial hospital கிறீன் அவர்களை நினைவுபடுத்தும் ஒரு முக்கிய வரலாற்று சான்றாக பல நூற்றாண்டுகள் கடந்தும் இன்றும் மக்களுக்கு தனது மருத்துவ பணியை green memorial hospital மேற்கொண்டு வருகின்றது.
No comments:
Post a Comment