யாழ்ப்பாணத்தில் காணப்படும் உயர்தர விடுதிகள்.
- Tilko Jaffna City Hotel
- Green Grass Hotel & Restaurant
- U.S Hotel
- Jaffna Heritage Hotel
- Gnanams Hotel
- PJ Hotel
- Subhas Hotel
- Hotel Lux Etoiles
- Taprospa
- Blue Haven
- Fort Hammen Heil Resort.
Tilko Jaffna City Hotel
யாழ்ப்பாணத்திலுள்ள விடுதிகளுள் star hotel என்ற அந்தஸ்தை கொண்ட முதலாவது hotel என்ற பெருமைக்குரியது.
இது யாழ்ப்பாணத்தின் மத்தியில் k.k.s வீதியில் அமைந்துள்ளது. இங்கு தங்குபவர்களின் மனம் நிறைவு பெறும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒரு உயர்தர விடுதியாகும். இதனை அண்மித்த வகையில் jaffna library, jaffna fort and lagoon ,hospital banks, commercial and business center போன்ற பிரபல்யமான இடங்கள் அமைந்துள்ளது. இதனால் இங்கு அதிகளவில் உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் வந்து மகிழ்வுடன் தங்கிச் செல்கின்றனர். இதனை 2010 ஆம் ஆண்டு November மாதம் 04 ஆம் திகதி கனடாவைச் சேர்ந்த MR & MRS Thavarijh என்பவரால் நிறுவப்பட்டது.
இவ்விடுதியில் அதிகப்படியாக 40 அறைகள் காணப்படுகிறது. Luxury roomஆனது நவீன உயர்தர வசதி வாய்ப்பக்களுடனும் அமைக்கப்பட்டுள்ளது. Luxury bed room களில் நவீன வசதிகளுடன் கூடிய Flat screen T.V, Mini bar, Tea/making facilities, Safety box, Fouser press , Free Wi-fi என பல்வேறு அம்சங்கள் காணப்படுகின்றன. இவ் அறைகளின் கதவில் திறப்பிற்கு பதிலாக பாதுகாப்புடன் கூடிய card system முறை பயன்படுத்தப்படுகிறது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி மகிழ்வுடன் தங்கிச் செல்வதற்கு ஏற்றவாறு Garden , Swimming fool, Restaurant, Bar போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு எல்லா வகையான மேலைத்தேய உணவுகளும் விசேடமாக தயாரித்து சிறந்த முறையில் பரிமாறப்படுகிறது. Restaurant உடன் இணைந்த வகையில் bar அமைந்துள்ளது.
இங்கு பெரும் விழாக்களை செய்வதற்கு ஏற்ற வகையில் மண்டபமும் காணப்படுகிறது. conference hall, wedding hall என்பன சிறந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளது. பெரும் விருந்துபசாரங்களுடன் கூடிய விழாக்கள் செய்வதற்கு தகுந்த chola banaquet hall காணப்படுகிறது. இது wedding receptions, conference மற்றும் ஏனைய நிகழ்வுகள் செய்வதற்கும் ஏற்ற வகையில் இம் மண்டபங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. 600 பேர் அமரக்கூடிய வகையில் சொகுசு ஆசன வசதிகளுடன் காணப்படுகிறது.
அத்துடன் Transport and Tour arrangement வசதிகளுடன் ஒழுங்கு செய்து தரப்படுகின்றது. இதற்கான வாகனமும் சுற்றுலா வழிகாட்டியும் இவரர்களால் ஒழுங்கு செய்து தரப்படுகின்றன. வாகனத்தை தாங்களே ஓட்டிச் செல்வதற்கும் அல்லது சாரதியுடன் கூடிய வாகனத்தை எடுத்துச் செல்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ் விடுதியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 8 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை யாழ்ப்பாணத்திலுள்ள
கலாசார மையங்களை பார்வையிடுவதற்குகான ஒழுங்குகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது இங்கு தங்குபவர்களுக்கு சிறந்த பொழுதுபோக்காகவும் மகிழ்ச்சியான சுற்றுலாவாகவும் அமைகிறது. இவ் விடுதியின் முன் வாயிலுக்கு அருகில் பார்ப்பவர்களை கவரும் வகையில் Cambridge car நிறுத்தப்பட்டுள்ளது.
இங்கு காணப்படும் மேலதிக வசதி வாய்ப்புக்கள்;.
- · Room With a Uniew- Penthouse
- · Gymnasium and Spa
- · Beauty Salon
- · Conference Room
- · Banqueting Hall
- · Transfort Facilities
- · A Mini Bar
- · Tea and Coffee Making Facilities
- · Flat Screen TV
- · Inter Neff Families
- · Modem Bath Room With Hot and Cold Water
- · Business Center
- Canary Service
ஐரோப்பிய நாடுகளில் இருந்து அதிகளவான வெளிநாட்டவர்கள் இவ்விடுதிக்கு வருகை தருகிறார்கள். June,July,August போன்ற மாதங்களில் தமது விடுமுறையை கொண்டாடும் வகையில் வந்து மகிழ்வுடன் தங்கிச் செல்கிறார்கள். மேலும் இங்கு வருகின்ற மக்களை கவரும் வகையில் எதிர் காலத்தில் இவ்விடுதியின் முன்புறத்தில் ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் யாழ்ப்பாணப் பாரம்பரிய பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு தீர்மானம் எடுத்துள்ளனர். இது தொடர்பான வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றது. ஏதிர்காலத்தில் மேலும் பல வசதி வாய்ப்புக்கள் இங்கு செய்யப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment