Friday, August 7, 2015

Fort Hammenhiel Resort

     போர்த்துக்கேயரால் தமது பாதுகாப்பின் நிமித்தம் இயற்கை துறைமுகமாக காணப்பட்ட ஊர்காவற்துறை கரையிலிருந்து 2km தூரத்திற்கு கடலின் உட்பரப்பில் காணப்பட்ட மண்திட்டை உயர்த்தி சிறந்த கடற் கோட்டையாக இவ் ஊர்காவற்துறை கோட்டை அமைக்கப்பட்டது

       பின்னர் போர்த்துக்கேயருக்கு அடுத்து வந்த ஒல்லாந்தரால் இக்கோட்டை சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டது. சிறந்த பீரங்கி தளங்களுடன் நடுவில் ஓட்டினால் வேயப்பட்ட கூரை அமைப்புடன் இக்கோட்டை அமைக்கப்பட்டுள்ளது. இது பன்றியின் கால் வடிவில் அழைக்கப்பட்டுள்ளமையினால் கமன்கில்ட் என்ற பெயரில் ஒல்லாந்தரால் அழைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வந்த ஆங்கிலேயர் எவ்வித மாற்றமும் செய்யாத போதும் நிர்வாக மையமாக இதனை வைத்திருந்தனர்.
பின்னர் சுதந்திரத்திற்கு பின்னர் இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்து சிறைச்சாலையாக காணப்பட்டது.
   
      இது இன்று இலங்கை கடற்படையினரால் நிர்வாகிக்கப்பட்டு வருகின்றது. அவர்கள் இதனை மேலும் புனரமைத்து சிறந்த hotel  ஆக பாவிக்கின்றனர். அதிகளவு சுற்றுலாப் பயணிகள் இங்கு செல்கின்றனர். கடலுக்கு நடுவில் இவ் கோட்டை காணப்படுவதனால் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த மிகவும் ரம்மியமான இடமாக இவ் HammenHiel Resort காணப்படுகின்றது. இங்கு பணியாற்றும் கடற்படையினர் இங்கு வருவோரை மிகவும் நல்ல முறையில் கவனிக்கின்றனர். இங்கு சிறந்த உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. 04 அறைகள் இங்கு உள்ளன. அதில் 01 அறையே பெரியது. இங்கு காணப்படும் தளபாடங்கள் அழகிய வேலைப்பாட்டுடன் மரத்தினால் ஆனவையாக காணப்படுகின்றன. இங்கு தனித்துவமான நடைமுறைகள் காணப்படுகின்றன.

   
அந்த வகையில் இங்கு தங்கும் சுற்றுலாப்பயணி ஒரு நாள் சிறையில் தங்குவது போன்ற உணர்வை ஏற்படுத்தும் ஒரு வித்தியாசமான நடைமுறையும் காணப்படுகிறது. இது தவிர 2012 ஆம் ஆண்டு இவ் விடுதி ஆசியாவின் சிறந்ந உபசரிப்பு மிக்கவிடுதியாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினரால் மிகவும் சிறந்தமுறையில்  தூய்மையாக இவ் விடுதி பேணப்படுகின்றது.

இங்கு காணப்படும் வசதிகள்;

  • ·         24 Hours Room Service


  • ·         Coffee Shop


  • ·         Wi-Fi in Public Areas


  • ·         Driver Quarters


  • ·         Conference Hall



  • ·         Boat service














No comments:

Post a Comment