நெடுந்தீவில் காணப்படும் அம்சங்களில் ஒன்று அங்கு காணப்படும் பெருக்குமரங்களாகும்.
ஒல்லாந்தர் ஆட்சியில் குதிரைகள் வளர்க்கப்பட்ட முக்கிய இடமாக நெடுந்தீவு காணப்பட்டதால் குதிரைகளின் உணவுக்காக இப் பெருக்கு மரங்களை ஒல்லாந்தர் தமது நாட்டிலிருந்து கொண்டு வந்து இங்கு அறிமுகப்படுத்தியதாகத் தெரிய வருகிறது.
இவ்வாறான மரங்கள் நெடுந்தீவை அடுத்து அவர்களின் ஆதிக்கம் நிலவிய மன்னார்க் கோட்டைப் பிரதேசத்திலும் காணப்படுகிறது. இம் மரங்களை அதிசயப் பொருளாகப் பார்ப்பதற்கு அது புதிய இனவகை மரங்கள் என்பது மட்டுமல்ல இலங்கையில் இது போன்ற பெரிய மரங்கள் இல்லை என்பதும் இன்னொரு முக்கிய காரணமாகும். இம் மரங்களின் அடிப்பாகத்தில் காணப்படும் குகை போன்ற வடிவம் பல மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்குரிய இடவசதிகளைக் கொண்டிருப்பது பார்ப்போரை வியப்பில் ஆழ்த்துவதாக உள்ளது.
No comments:
Post a Comment