Saturday, August 13, 2016

நல்லூர் கந்தன் ஆலயம்

     
நல்லூர் கந்தன் ஆலயம் தோன்றிய இடம் தோற்றக் கால அமைப்பு போன்றன இன்று மாறியிருந்தாலும் ஈழத்தமிழரால் மிக உயர்ந்த நிலையில் போற்றப்படுவதற்கு அது கி.பி. 19ஆம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட 450 ஆண்டு கால யாழ்ப்பாண இராச்சியத்தின் அரசு ஆலயமாகத் திகழ்ந்ததே முக்கிய காணமாகும்.

Saturday, July 23, 2016

கோப்பாய் சங்கிலியன் கோட்டை





வரலாற்றுப் பழமை வாய்ந்த கோப்பாய் சங்கிலியன் கோட்டை கோப்பாய் சந்தியில் இருந்து வடக்காகக் சில யார் தூரத்தில் வலப்பக்கமாக சற்று உள்நோக்கி அமைந்துள்ளது. யாழ்ப்பாண அரசு காலத்தில் அதிலும் குறிப்பாக சங்கிலி மன்னன் ஆட்சியில் இது ஒரு முக்கிய பாதுகாப்பு அரணாகவும் அரச மையமாகவும் திகழ்ந்ததெனக் கூறலாம்.

Friday, November 27, 2015

நெடுந்தீவு பெருக்கு மரங்கள்.


       
நெடுந்தீவில் காணப்படும் அம்சங்களில் ஒன்று அங்கு காணப்படும் பெருக்குமரங்களாகும்.

Thursday, November 26, 2015

ஓல்லாந்தர் காலக் கோட்டை


   
 நெடுந்தீவு மத்தியில் தற்போதைய வைத்தியசாலைக்கு கிழக்கே பயன்படுத்த முடியாத நிலையில் மிகப்பழைமை வாய்ந்த கட்டிடத் தொகுதிகள் சிதைவுண்டு காணப்படுகின்றன.

Tuesday, November 24, 2015

யாழ்ப்பாணத்து வடமோடி தென்மோடிக்கூத்து



 யாழ்ப்பாணத்தில் ஆடப்பட்ட கூத்துக்களே மட்டக்களப்புக்கு எடுத்துச் செல்லப்பட்டன என்ற கருத்தை மௌனகுரு தமது ஆய்வில் எடுத்து  முன்வைத்துள்ளார். மட்டக்களப்பில் ஆடப்படும் பெரும்பாலான கூத்துக்கள் யாழ்ப்பாணத்திலும் ஆடப்பட்டன. ஆகவே மட்டக்களப்பிற் காணப்படும் வடமோடி தென்மோடி மரபுக்கும் யாழ்ப்பாணத்தில் ஆடப்படும் வடமோடி தென்மோடி மரபுக்கும் தொடர்புண்டு என்பதை மறுக்கவியலாதே.

Monday, November 23, 2015

இலங்கையில் கலாசார சுற்றுலா வளர்ச்சி பெற உறுதுணை புரியும் நிறுவனங்கள்


          இலங்கையில் அமைதி நிலவும் தற்போதைய சூழ்நிலையில் பல்வேறு அபிவிருத்தி சுட்டிகள் முதன்மையை காட்டி நிற்கின்றன. பொருளாதார வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்குமான சாத்தியக் கூற்றை கொண்ட துறையாக சுற்றுலாத்துறை காணப்படுகின்றது.இது அண்மைக் காலங்களில் வளர்முக நாடுகளில் அதிகமாக உணரப்பட்டு வருகின்றது.

Sunday, November 8, 2015

U.S Hotel


u.s hotel 
யாழ்ப்பாண நகரில் இலக்கம் 853, ஆஸ்பத்திரி வீதியில் அமைந்துள்ளது.

Saturday, September 12, 2015

வேடுவர் Dabana


       
வேடுவர்  எனப்படுவோர் இலங்கை காடுகளில் வேட்டையாடி வாழும் வாழ்க்கையை பழக்கமாகக் கொண்டு வாழும் மனிதர்களாவர். இவர்கள் இலங்கைக்கு வேறு எந்த நாட்டில் இருந்தும் வந்து குடியேறாதவர்கள் என்பதால் இவர்கள் இலங்கையின் பழங்குடி மக்களும் ஆவர்.

Friday, August 7, 2015

Fort Hammenhiel Resort

     போர்த்துக்கேயரால் தமது பாதுகாப்பின் நிமித்தம் இயற்கை துறைமுகமாக காணப்பட்ட ஊர்காவற்துறை கரையிலிருந்து 2km தூரத்திற்கு கடலின் உட்பரப்பில் காணப்பட்ட மண்திட்டை உயர்த்தி சிறந்த கடற் கோட்டையாக இவ் ஊர்காவற்துறை கோட்டை அமைக்கப்பட்டது