Wednesday, April 15, 2015

கூத்து

 

   
கூத்து என்னும் பதமானது குதி எனும் சொல் அடியில் இருந்து தோற்றம் பெற்றது இது ஆடல் பாடல் கலந்து வருவது எனப் பண்டைய காலத்தில் பொருள் கொள்ளப்படுகின்றது.
  இதன் பின் சங்க காலத்தில் நாடகத்தையே கூத்து என்று அழைத்தனர். ஆடிக் கதை சொல்லல் கூத்தின் அடிப்படையாகும். இக் கூத்துக்களின் தோற்றத்திற்கு வித்திட்டது சங்ககால சடங்குகளாகும். துணங்கைக்கூத்து குரவைக்கூத்து களவேள்வி வேலன்வெறியாடல் கைநீராடல் வாடாவள்ளி போன்றனவற்றைக் குறிப்பிடலாம்.
       இச் சடங்குகளில் தோற்றம் பொற்ற தமிழ் நாடகம் பல்வேறு விழாக்களிலும் அரங்கேற்றப்பட்டிருக்கின்றமையை அறிய முடிகின்றது. ஓணவிழா பங்குனிவிழா உள்ளிவிழா காமன்விழா இந்திரனவிழா வேனில்விழா போன்றன குறிப்பிடதக்கது. இவ் ஆற்றுகை ஆற்றியோரை கூத்ததர் குழாம் என்று அழைக்கின்றனர்.கோடியர் விறலியர் பாணர் பொருணர்  அகவுணர் கண்ணுளர் வயிரியர் முதலான கூத்தர் குழாழத்தினை அறிய முடிகின்றது.

     இவ்வாறாக வளர்ச்சி அடைந்து வந்த கூத்து ஐரோப்பியர் காலத்தில் தொருக்களிலும் வீதிகளிலும் நிகழ்தப்பட்ட கூத்துக்கள் தெருக்கூத்துக்கள் ஆகும். தமிழ் நாட்டின் தேசியக் கலைகள் இதுவாகும். மேடை அலங்காரம் இன்றி தெருவில் ஒரு வெள்ளத் துணியை தூக்கிப்பிடிக்கவும் தீப்பந்தங்கள் ஒலிகாட்டவும் மேடை ஒப்பனை அதிகமில்லாத நடிகர் ஆடியும் பாடியும் தொருக்களில் நடித்துக்காட்டும் நாடகங்களை மக்கள் தெருக்கூத்து என்று அழைத்தனர்.
     இசைபாடல்களால் ஆன இத்தகைய நாடகங்களை மக்கள் 19ம்நூற்றாண்டுகளில்மிகுதியாய் கண்டுகளிதனர். வரவர சிறுசிறு பகுதிகளாய் உரைநடையில் உரையாடல் நடைபெறதொடங்கியது. மேடையின்றி தெருக்களில் நடைத்தபெற்ற நாடங்கள் பரந்த வெளியில் கட்டப்பெற்ற கீற்றுக்கொட்டகைகளில் நடைபெறலாயின. ஓன்று இரண்டு காட்சிகள் மாற்று திரைகள் தொங்கவிடப்பட்டன.முறையற்ற ஆடல்கள் நிறைந்த நாடக உணர்வுடைய நடிகைகளால் காட்டப்படும் நிலைக்கு வளர்ந்தது. இத்தகைய நாடகங்கள் தொருக்களைவ விட்டு மேடைக்கு வந்தாலும் நாட்டுப்புற மக்களிடையே கவர்ந்து ஈர்த்தன. ஆகையால்  இத்தகைய நாடகங்களை மக்களுக்குரிய நாடகங்கள் என்னும் சிறப்புப் பொருள் தருமாறு “நாட்டார் நாடகங்கள்” என்று உயர்வாக அழைப்பதே பொருகத்தமானதவும் சிறப்பானதாகவும் உள்ளது.

       இலங்கை தமிழர் கூத்துக்களையே பாரம்பரியமாக ஆற்றுகை செய்து வந்தனர். ஈழதமிழர் தம் வரலாற்றை ஆராய்கிளின்றனர். தமிழர்களின் வாழ்வாதாரத்தோடு பின்ணிபினைந்து ஒரு வடிவமாக கூத்து விளங்குகின்றது.இக் கூத்தானது மரபு வழி ரீதியாக பரம்பரையாக ஆற்றுகை செய்யப்பட்டு வந்த ஒரு கலை வடிவம்.
     18ம் நூற்றாண்டில் கூத்து பிரதிகள் பல உருவானமை புலனாகின்றது. எடுத்துக்காட்டாக கணபதிஜயர்(1709-1794) வாளப்பிரமன் நாடகத்தை எழுதினாரென அறியமுடிகின்றது. பின்பு 1960களில் பேராசிரியர் அ. வித்தியானந்தன் இக் கூத்துக்களை மீள் கண்டு பிடிப்பு செய்து இன்னும் ஆங்காங்கே சில இடங்களில் இக் கலைகளை ஆற்றுகை செய்ப்படுவதை அவதானிக்கலாம்.

No comments:

Post a Comment