Tuesday, November 24, 2015

யாழ்ப்பாணத்து வடமோடி தென்மோடிக்கூத்து



 யாழ்ப்பாணத்தில் ஆடப்பட்ட கூத்துக்களே மட்டக்களப்புக்கு எடுத்துச் செல்லப்பட்டன என்ற கருத்தை மௌனகுரு தமது ஆய்வில் எடுத்து  முன்வைத்துள்ளார். மட்டக்களப்பில் ஆடப்படும் பெரும்பாலான கூத்துக்கள் யாழ்ப்பாணத்திலும் ஆடப்பட்டன. ஆகவே மட்டக்களப்பிற் காணப்படும் வடமோடி தென்மோடி மரபுக்கும் யாழ்ப்பாணத்தில் ஆடப்படும் வடமோடி தென்மோடி மரபுக்கும் தொடர்புண்டு என்பதை மறுக்கவியலாதே.


   வடமோடிதென்மோடிக் கூத்துக்களில் முதற்கண் காப்பு பாடவேண்டும். பெரும்பாலும் வடமோடியிலே காப்பு வெண்பாவாகவும் தென்மோடியிலே விருத்தப்பாகவும் இருக்கும். ஊதாரணமாக வடமோடியாக ஆடப்படும் இராமநாடகத்தில் பின்வரும் வெண்பா பாடப்பகின்றது
        “ஆனைமுகத் தோனே அரனார் திருமகனே
         பானை வயிற்றுப் பரம்பொருளே- கானம்;
         கடந்த ஸ்ரீராமன் காதைதனை ஈண்டு
         தொடந்தேன் அருள்வாய் துணை” – சின்னையா.

   வடமோடிக் கூத்தார் பாரமான உடைகளையே அணிகின்றனர். இவர்கள் அணியும் முடி பாரமானது. அது பலாமரம் வெக்கிளுவை ஆகிய மரங்களினால் செய்யப்படுகின்றன. முடியின் மீது கண்ணாடிகள் பதிக்கப்படும். முடியின் உச்சில் சந்திரவட்டக்குடை அமைக்கப்படும். மட்டக்களப்புக் கூத்துகளிலும் இவ்வாறே அணிகின்றனர். மட்டக்களப்புக் கலைஞர்கள் ஒப்பனைக் கலையை யாழ்ப்பாணத்திலேயே கற்றுக்கொண்டணர் என்பர். ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தவரே மட்டக்களப்ப்pனரக்கும் உடுப்புக்களையும் ஏனைய அணிகலங்களையும் வழங்கி வந்தனர். ஓப்பனை கலைஞர் ஐ. பிலிப்பு

 தென்மோடிக் கூத்தர்கள் பாரம் குறைந்த முடிகளை அணிவர். இவை முள்முருக்கு மரத்தினால் செய்யப்பட்ட கண்ணாடி முதலிய பதிக்கப்படும். வெக்கிளுவை மரமும் பாரமில்லாத வொன்றாகையால் இம்மரமும் தென்மேரடிக் கூத்தர்களால் பயன்படுத்தப்படும்.

 வடமோடியினர் அணியும் உடுப்பை கரப்பு உடுபென்பர். அரசர் மந்திரி சேனாதிபதி ஆகியோர் ஜந்து தட்டுள்ள கரப்புடுப்பை அணிவர். சுhதாரண பாத்திரங்கள் மூன்று தட்டுள்ள கரப்புடுப்பை அணிவதை காணலாம்;. கரப்புடுப்பு ஒவ்வொரு தட்டுக்கும் ஒவ்வொரு பிரப்பம் கம்பு வளையம் செய்து பொம்மி நிற்கச் செய்வர். கரப்புடுப்பின் அடியில் பளிங்கு மணியும் பட்டு நூலும் தொங்கவிடுவர்.

 தென்மோடியினர் கரப்புடுப்பு அணிவதிவில்லை. அவர்கள் பட்டுச்சேலையை தாருவாச்சிக் கட்டி மேலே மணிகள் பொருத்தப்பட்ட சட்டைகளை அணிவர்,இவர்களுடைய ஆட்ட நுணுக்கங்களைப் பார்க்க வசதியாக இவ்வகை உடுப்புக்கள் உதவுகின்றன. வடமோடியினர் வில் அம்பு தண்டாயுதம் பட்டாரி ஆகிய ஆயுதங்களைப் பயன்படுத்துவர். ஆனால் தென்மோடியினர் வால் ஒன்றையே ஆயுதமாகக் கொண்டு ஆடுவர்.சில பாத்திரங்கள் வாளுக்குப்பதிலாக நன்றாக சீவி எடுத்தக தடிகளை பயன்படுத்தக் காணலாம்.

 இரு சாரரும் கைப்புயம் தோட்புயம் என்பவற்றையும் அணிவர். இவையும் முருக்கம் செத்தல்களால் செய்யப்பட்ட கண்ணாடிகள் பதிக்கப்பட்டிருக்கும். இவ்விடயம் அரங்கம் ஆடல் பாடல் ஒப்பனை என்பன பற்றிய இயலில் மேலும் விரிவாக ஆராயப்படும். இதுவரை கூறப்பட்டவற்றிலிருந்து வடமோடி தென்மோடி பற்றிய பின்வரும் உண்மைகள் தெரிய வருகின்றது.
 வடமோடிக்கூத்து இதிகாச புராண கதைப்பொருளை பயன்படுத்தி நாடகத்தை அமைக்கின்றது. தென்மோடிக் கூத்து நாட்டு கற்பனைக் கதைகளை கையாண்டு நாடகத்தின் வடிவத்தினை உருவாக்குகின்றனர்

நாட்டுக்கூத்தின் மோடிகளுள் தென்மோடிக் கூத்தே பழைவாய்ந்ததாக காணப்படுகின்றது. அலங்காரரூபன் நாடகம் அநுருத்திரன் நாடகம்  என்பன தொன்மை வாய்ந்த தென்மோடிக்கூத்துக்கள் ஆகும். வடமோடிக் கூத்தில் போர் சார்ந்த காட்சிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும். தென்மோடிக் கூத்தில் காதல் சார்ந்த காட்சிகளுக்கு முதன்மை அளிக்கப்படும் இதன் காரணமாக வடமோடிக் கூத்தில் வீர உணர்வு முதன்மை பெறும் தென்மோடி கூத்தில் சிருங்கார சுவை அதிகமாகக் காணப்படும்.

 வடமோடிக் கூத்தில் ஆடல்கள் வேகமானதாக அமைந்திருக்கும் தென்மோடிக் கூத்தில் ஆடல்கள் நுணுக்கம் வாய்ந்ததாக காணப்படும். வடமோடிக் கூத்தில் நடிகனது பாதகம் முழுவதும் நிலத்தில் படும் வகையில் ஆடல் மேற்கொள்ளப்படும். தென்மோடிக் கூத்தில் பாதத்தின் முற்பகுதி அல்லது குதிக்கால் நிலத்தில் படும்வகையில் ஆடல் மேற்கொள்ளப்படும். இதன் காரணமாக தென்மோடியுடன் ஒப்பிடுகையில் நடிகனின் ஆடல் இலகவானதாக அமைந்தது. பாதத்தின் முற்பகுதி அல்லது குதிக்கால் நிலத்தில் படும் வகையில் ஆடல் மேற்கொள்வதனால் நடிகனின் ஆடல் கடினமாக அமைந்து வடுகின்றது.

  வடமோடியில் நடிகன் வரவு ஆடடத்தை நிகழ்த்திய பின் தனக்குரிய வரவுப்பாடலை பாடுவான். தென்மோடியில் வரவு ஆட்டத்துடன் நடிகன் களைத்தப் போவதனால் நடிகனுக்குரிய வரவிற்கு மட்டும் வரவுப்பாடல் பாடப்படும். ஏனைய சந்தர்ப்பங்களில் வரவுப்பாடல் பாடப்படுவதில்லை.

 வடமோடிக்கூத்துக்கள் பெரும்பாலும் வட்டப்பாங்கில் ஆடல் இடம் பெறும்.தென்மோடிக்கூத்தில் நேர்கோட்டுபாங்கில் ஆடல் நிகழும்.

 வடமோடியில் பொடியடி விசனம்(வட்டமாக ஆடுதல்) குத்திமிதி பாய்ச்சல் போன்ற ஆடல்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். தென்மோடிக்கூத்தில் சீரணிஉலா ஒய்யாரம் போன்ற ஆடல் வகைகள் பயன்படுத்துகின்றனர்.

No comments:

Post a Comment