Sunday, April 19, 2015

கிராமிய நடனங்கள்

   
தேவதாசிகளின் ஆட்டம் சின்னமேளம் என எமது நாட்டிய மரபு எவ்வாறு கோயில் சார் கலையாக இருந்து வந்ததோ
அதே போல் கிராமிய நடனங்களான கும்மி கோலாட்டம காவடி கரகம் சீனடி சிலம்படி ஒயிலாட்டம் பாவைக்கூத்து பொம்மலாட்டம் போன்றனவும் கோயில்களைச் சார்ந்த கலையாக வளர்ந்து வந்தனவாகத் தெரிகின்றது.
 பக்திப் பரவசத்தால் ஆடுதல் கலையேறி ஆடுதல் நேர்த்திக்கடன் கழிக்க ஆடுதல் வருடார்ந்த உற்சவங்கள் விழாக்களில் ஆடவேண்டும் என்று கருதி ஆடுதல் தங்களுடைய புலமையை வெளிப்படுத்துவதற்காக ஆடுதல் ஆட்டுவித்தல் போன்ற பல நிலைகளில் இக் கிராமிய நடனங்கள் நிகழ்ந்தனவாகத் தெரிகின்றன

ஒயிலாட்டம்



கிராமக் கோவில்களில் ஒயிலாட்டம் விழாக்காலங்களில் ஆடப்படுகிறது.இதிகாச புராண வரலாற்றுக் கதைகளே ஒயிலாட்டத்தில் பாடப்படும்கட்டபொம்மன் மதுரைவீரன் வள்ளி திருமணம் கதைகள் இடம் பெறும்.ஒயிலாட்டம் ஆடுபவர் வெள்ளை ஆடை அணிந்து இருப்பர். காலில்சலங்கையும் கட்டியிருப்பர். கையில் ஆளுக்கொரு கைக்குட்டையைப் பிடித்துஇருப்பர். நுனியில் பிடித்து அதை அழகாக வீசியபடியே பாடி ஆடுவர்.



கோலாட்டம்



கோலாட்டம் என்பது பெண்களுக்கென்றே உரிய ஆட்டமாகும். இரண்டுகோல்களைப் பயன்படுத்தி ஒன்றுடன் ஒன்று மோதி ஒலி எழுப்பி ஆடுகின்றஆட்டமே கோலாட்டம் ஆகும். சமுதாயத்தைப் பற்றியும்இ தலைவர்களைப்பற்றியும் கோலாட்டப் பாடல்கள் எழுதப்பட்டன.  பிற பகுதிகளிலும் கோலாட்டம் ஆடப்படுகிறது.





கரகாட்டம்



மாரியம்மனுக்கு ஆடி மாதத்தில் கரகம் எடுப்பது தமிழ் நாடெங்கும் உள்ளவழக்கமாகும். மலர்களைக் கொண்டு அழகான ஒப்பனை செய்யப்பட்டகுடத்தைத் தலையில் வைத்துக் கொண்டு ஆடும் ஆட்டம் கரக ஆட்டமாகும்.இறைவழி பாட்டுடன் தொடர்பு உடையது இந்த கலை பல்வகை வண்ணமலர்களால் போர்த்தப்பட்டு அழகாகச் செய்யப்பட்டிருக்கும். இந்தகரகாட்டத்தில் ஆண்கள் பெண்கள் ஒன்றாக ஆடுவது பல அடுக்குகள்கொண்ட கரகத்தைத் தாங்கி ஆடுவது கரகாட்டத்தின் தனிச்சிறப்பு
.




காவடி ஆட்டம்








காவடியாட்டம் சமய உணர்விற்காகவும் பொழுதுபோக்கிற்காகவும்நிகழ்த்தப்படுகிறது. காவடி தண்டைக் கொண்டு ஆடுவதால் இவ்வாட்டம்காவடியாட்டம் எனப் பெயர் பெற்றது காவடி எடுத்து முருகக் கடவுளைவழிபடும் நிகழ்ச்சியாகக் காவடி ஆட்டம் நடைபெறுவது தமிழர்கள் மரபாகும்.காவடியாட்டம் இறைத் தொடர்புடையது ஆதலால் பல கடுமையானநோன்புகளை மேற்கொண்டு காவடி எடுப்பர். கலைத்திறனும் ஆடல் நுட்பமும்இதில் மிகுதியாக இருக்கும்.







கும்மியாட்டம் 



யாழ்ப்பாணமெங்கும் நிகழும் ஆட்டங்களில் கும்மியாட்டம் முக்கிய இடம் வகித்துவருகின்றது. கும்மிக்கென்று தனிமெட்டு உண்டு. ஒருவர் முதலில் பாடஅதனைத் தொடர்ந்து பெண்கள் குழுவாகச் சேர்ந்து பாடுவர்.






வில்லுப்பாட்டு




யாழ்ப்பாணஉள்ள நாட்டுப்புறக் கலைகளில் மிகச் சிறந்தது வில்லுப்பாட்டு.வில்லுப்பாட்டு பிறப்பிடம் குமரி மாவட்டம் வில்லுப்பாட்டில் குறைந்தது ஐந்துபேர் இருப்பர். வில்லுப்பாட்டில் கதைப் பாடல்களைப் பாடிக்காட்டுவார்கள்.தலைவர் இருவர் கதையைப் பாட்டாகக் கூறிச் செல்லும்போது விளக்கவேண்டிய இடத்தில் விளக்கி உரைநடையாக கூறுவர். தெய்வங்களின்வரலாறு. தெய்வ நிலை பெற்ற வீரர்களின் வரலாறு. அரசர்களின் வரலாறுஇவற்றை மக்களுக்கு எடுத்துக் கூறவே வில்லுப்பாட்டு பயன்பட்டது.விழாக்களில் பாடப்பட வில்லுப்பாட்டுஇ இன்று இலக்கியம் அரசியலுக்குபயன்படுத்தப்பட்டு வருகின்றது. அரசியல் சமுதாயத் தலைவர்களின்வரலாறுகள் வில்லுப்பாட்டில் இடம் பெறுகின்றன.



தெருக்கூத்து




பிறநாட்டுப்புறக் கலைகளைப் போன்றே இதுவும் தெய்வ வழிப்பாட்டோடுதொடர்பு உடையது. திரௌபதி விழாக்களில் மாரியம்மன் விழாக்களில்சிவன் திருமால் கணேசன் ஆகியோருக்கு எடுக்கப்படும் விழாக்களில் தெருகூத்தானது நிகழ்த்தப்பட்டு வருகிறது.
. தெருகூத்து பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாறுபட்டுநிகழ்த்தப்படுகிறது. தெருகூத்தில வரும் கதாபாத்திரங்களின் பண்புகளை வண்ணங்களும் ஒப்பனையும் வெளிப்படுத்தும் துரியோதனனுக்கு சிவப்பும்துச்சாதனுக்கு மஞ்சள் பீமனுக்கு மேகவண்ணமும் கிருஷ்ணனுக்குபச்சையும் திரௌபதிக்கு இளஞ்சிவப்பும் அர்ச்சுனனுக்கு நீலமும் தீட்டுவர்.


தெருக்கூத்தில் முதன் முதலாக அரங்கினுள் நுழையும் பாத்திரம்கட்டியக்காரன் ஆவான். அவன் கூத்தின் நடுநாயகமான பாத்திரமாகி அரசனைப் புகழ்பவனாகவும் தூதுவனாகவும் வேலைக்காரனகவும்கோமாளியாகவும் பொது மக்களுள் ஒருவனாகவும் மாறிமாறிப் பாடுவான்.கூத்தைத் துவக்கி காட்சிகளை விளக்கி கதைகளைத் தெரியப்படுத்திஅறிவுரைகளை தூவி காலநேரச் சூழல்களை முறைப்படுத்தி வாழ்த்துக்கூறுவதுடன் கூத்தை முடிக்கும் பல வேலைகளையும் செய்கின்றவனாககட்டியக்காரன் தெருக்கூத்தில் இடம் பெறுகிறான். கூத்தின் இறுதிக்கட்டம்பொது வசனம் முடிவுப்பாட்டு மங்களம் பாடுவதோடு முடியும். தெருகூத்தானது இவ்வாறு அனைத்து நாட்டுப்புற கலைகளுக்குச் சிறப்புசெய்வதனை காணலாம்.





பொம்மலாட்டம் (பாவைக்கூத்து)



பொம்மைகள் வைத்து நிகழ்த்துவதால் பாவைக் கூத்து எனப்படுகிறது.பொம்மைகள் தோல் பொம்மைகள் மண் பொம்மைகள் என இருவகைப்படும்.பாவைகளை மரத்தாலும்தோலாலும் செய்து நூல்களைக் கட்டி ஒரு திரைக்குப் பின்னாலிருந்து ஒருவர்ஆடியசைத்துக் கதைகளை விளங்கச் செய்யும் நாட்டுப்புறக் கலைக்குபாவைக் கூத்து எனப்பெயர்.

மரப்பாவைகள் நல்ல ஆடைகள் அணிவிக்கப் பெற்றிருக்கும் தரையில்புரளுமாறு ஆடைகள் பெரிதாக இருக்கும் காண்பதற்கு கால்களே இல்லாமல்மனப்பாவனையில் கால்கள் உள்ளது போல் காட்டப்பெறும். கயிறுகள் இன்றிபொம்மைகள் தாமே. இயங்குவதாக மனத்தோற்றத்தை முழுமையாகத்தோற்றுவிக்கிறபோது அது கலையாகிவிடுகிறது



பொய்க்கால் குதிரை


புராணக் கதைகளைப் பொய்க்கால் குதிரை ஆட்டத்தின் மூலம் நடித்துக்காட்டுவதுண்டு தஞ்சையை ஆண்ட மராட்டியர்களால் இக்கலை சிறப்புற்றது.ஆணும் பெண்ணும் பங்கேற்கும் இவ்வாட்டத்தில் ஆண் அரசர்வேடந்தாங்கியும் பெண் அரசி வேடந்தாங்கியும் ஆடுவர்.







No comments:

Post a Comment