Saturday, December 13, 2014

மடம்

              

   

     யாழ்ப்பாண மக்களது பாரம்பரிய கட்டிடக் கலை அம்சங்களில் மடம் முக்கியமானதாகும்.
   எமது பண்பாட்டில் மடங்களின் தோற்றம் 2000 ஆம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. 

              மடம் என்ற சொல்லுக்கு பழந்தமிழ்  இலக்கியத்தில் இடம்சத்திரம்பிரமச்சாரிகளும் சந்நியாசிகளும் வாழும் இடம்  என குறிப்பிடப்படுகிறது.  
       கி.பி 1ம் நூற்றாண்டு அநுராதபுரத்தில் கிடைத்த கல்வெட்டு மூலம் வட இலங்கைப் பரப்பில் பல மடங்கள் காணப்பட்டதனை அறிய முடிகிறது. இடைக்காலத்தில் மடம் என்ற சொல்லுக்கு அம்பலம் என்ற இன்னொரு பெயரும் இருந்துள்ளது. இதற்கு சான்றாக  புத்தளத்தில்  கண்டுபிடிக்கப்பட்ட கி.பி 11 ஆம் நூற்றாண்டுக்குரிய கல்வெட்டு ஒன்றில் ஐந்நூற்றுவர் என்ற வணிகர் போக்குவரத்திற்கு வசதியாக அம்பலம் ஒன்றிருந்தது. 
         ஆரம்ப காலத்தில் சன்னியாசிகளும் துறவிகளும் தங்குவதற்காக அமைக்கப்பட்ட மடங்கள் வர்த்தக விருத்தியின் விளைவாக நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் தமது களைப்பினை நீக்கி பாதுகாப்பாக பொருட்களை வைத்து ஓய்வு பெறும் இடங்களாக மாற்றம் பெற்றன. 
   இவ்  மடங்கள் பல வகைப்பட்டதாக காணப்பட்டன. ஆலய குருக்கள் மடம், தண்ணீர்ப்பந்தல் மடம்,அன்னதான மடம், தெருமூடி மடம் ,சிறாப்பர்மடம்  என பல வகைப்பட்டதாகும். இவ்வகையில் யாழ்ப்பாணத்தில் ஆறுகால் மடம், பருத்தித்துறை தெருமூடி மடம், கீரிமலை வைத்திலிங்க மடம் சிறாப்பர் மடம், புங்குடுதீவு மடம் போன்றன சிறப்பான மடங்களாக திகழ்ந்துள்ளன. 
     ஆயினும்  ஐரோப்பியர் காலத்திற்கு  முற்பட்ட  மடங்களினது  எச்சங்கள் கண்டறியப்படாமைக்குரிய காரணங்களாக ஆரம்ப காலத்தில் நிழல்தரு பாரிய மரங்களும் அதனைத் தொடர்ந்து அழியக்கூடிய பொருட்களால் உருவாக்கப்பட்ட மடங்களுமே காரணமாகும்.
       எமது பண்பாட்டின் அடையாளமாக விளங்கும் இவ் மடங்கள் இன்றைய காலத்தில் கவனிப்பாரின்றி அழிவடைந்து  செல்கின்றமை மிக வருத்தத்திற்குரியது.

No comments:

Post a Comment