Tuesday, December 16, 2014

மந்திரிமனை




மந்திரிமனை
வட இலங்கையில் குறிப்பாக தமிழரின் பாரம்பரிய வரலாற்றை நினைவுபடுத்தும் நினைவு சின்னங்கள் தற்காலத்தில் அரிதாகவே காணப்படுகின்றன.
ஏனெனில் அன்னியர் ஆட்சிக் காலத்தில் அனேகமான தமிழர் பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் அழிவடைந்து விட்டன. தற்காலத்தில் ஒரு சில தொல்லியல் சின்னங்களே அவையும் பாதுகாப்பற்று அழிவடைந்த நிலையிலையே காணப்படுகின்றன. அந்தவகையில் தமிழரின் பாரம்பரியத்தை பறைசாற்றுகின்ற முக்கியமான தொல்லியல் சின்னங்கள் யாழ்ப்பாணத்தில் நல்லூர் நகரில் காணப்படுகின்றன. இதில் குறிப்பாக மந்திரிமனையை குறிப்பிடலாம். இது வடஇலங்கையில் முக்கிய தொல்லியல் சின்னமாக இலங்கை தொல்லியல் திணைக்கழத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட போதும் இதுவரை இதனை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை.

ஆனால் யாழ்ப்பாணத்தில்; இருந்த தமிழரசர் பாரம்பரியத்தை பறைசாற்றுகின்ற ஒரு முக்கிய நினைவுச் சின்னமாக காணப்படும் மந்திரிமனையினையை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரினதும் கடமையாகும். ஆனால் தற்போது மந்திரிமனையானது கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுகிறது.

இவ்வாறான நிலை தொடர்ந்தால் இன்வரும் காலங்களில் எஞ்சியுள்ள தமிழர் பாரம்பரிய நினைவு சின்னங்கள் முற்றாக அழிவடைந்ததுடன் எதிர்கால சந்ததியினருக்கு தமிழர் வரலாறு பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்புக்கள் ஏற்படாது. எனவே மந்திரிமனை போன்ற தமிழரின் பாரம்பரிய நினைவுச் சின்னங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டும்.

மந்திரிமனையின் முகப்பில் காணப்படும் கல்வெட்டுக்கள்







கல்தொட்டி



சுரங்கப்பாதை


மாடிப்படிக்கட்டு

சமையலறை

கிணறு



No comments:

Post a Comment